;
Athirady Tamil News

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எந்த நாட்டினது தெரியுமா?..!!

0

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக தென் கொரியா கைப்பற்றியுள்ளது.இதுவரை உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை ஐரோப்பிய நாடுகள் தக்கவைத்திருந்தது.

இதில் ஜேர்மனியின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இன்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வரும் அரிய வாய்ப்பும் அமைந்திருந்தது.

தற்போது இந்த கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற உயரிய அந்தஸ்தை ஜேர்மனி இழந்துள்ளது.அந்த இடத்தில் முதன் முறையாக தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் வந்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாடு மேற்கொண்ட புதிய முடிவுகளே தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் கடவுச்சீட்டுகள் உயரிய அந்தஸ்தை பெற காரணம் என கூறப்படுகிறது.

இதுவரை ஐரோப்பிய நாடுகள் கோலோச்சியிருந்த நிலையில் முதன் முறையாக ஒன்றல்ல இரண்டு ஆசிய நாடுகள் அந்த உயரிய அந்தஸ்துக்கு வந்துள்ளது.குறித்த இரு நாடுகளின் கடவுச்சீட்டு கைவசம் வைத்திருக்கும் நபர்கள் உலகின் 162 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

ஜேர்மன் மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் நபர்கள் உலகின் 161 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

பிரித்தானியர்கள் உலகின் 159 நாடுகளுக்கு விசா இன்றி பயணப்படலாம். இந்த வரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியர்கள் 156 நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் செய்யலாம்.

நியூசிலாந்து நாட்டவர்கள் 155 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம். இந்த வரிசையில், உலகின் மிகவும் சக்தி குறைந்த ஆவணமாக ஆப்கானிஸ்தான் நாட்டின் கடவுச்சீட்டு கருதப்படுகிறது. ஆப்கான் நாட்டவர்கள் உலகில் வெறும் 26 நாடுகளுக்கே விசா இன்றி பயணமாக முடியும்.

ஈராக் நாட்டவர்கள் விசா இன்றி 29 நாடுகளுக்கும், பாகிஸ்தான்(30), சிரியா(33), சோமாலியா(34). கடவுச்சீட்டின் வண்ணங்களிலும் உரிய முக்கியத்துவம் உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்லாமிய நாடுகள் தங்கள் கடவுச்சீட்டுகளை பச்சை வண்ணத்திலும், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சிவப்பு நிறத்திலும், நியூசிலாந்து மட்டும் கறுப்பு வண்ணத்திலும் கடவுச்சீட்டை புழக்கத்தில் வைத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + fourteen =

*