;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலையில் பக்கவாத நோய் சிகிச்சைக்கான பிரிவை நிர்மாணித்தல்..!!

0

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் இடம்பெறும் மரணங்கள் பெரும்பாலானவற்றிற்கு முக்கிய காரணம் பக்கவாத (stroke )நோயாகும்.

இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக முழுவசதிகளையும் கொண்டதாக நாட்டிலுள்ள முக்கிய வைத்தியசாலைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் பக்கவாத நோய்க்கானபிரிவொன்றினை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவுக்குழு சிபார்சுக்கமைவாக 633.97 மில்லியன் ரூபா செலவில் M/s Link Engineering (Pvt.) Ltd.ற்கு வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + seventeen =

*