தவறான விமானம் என நினைத்து அவசர கால ஜன்னல் வழியாக குதித்த இளைஞர்..!!

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள நெவார்க் விமானநிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக விமானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை ட்ராய் பட்டூன் (25) என்பவர் ஏறியுள்ளார். விமானத்தின் உள்ளே சென்ற பிறகு இது தான் செல்ல வேண்டிய விமானம் இல்லை என்றும் தன்னை இறக்கிவிடும்படியும் விமான சிப்பந்திகளிடம் கூறியுள்ளார்.
ஆனால் அந்த விமானத்தில் இருந்த அதிகாரிகள் அவரை அமைதியாக உட்காரும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் விமானத்தில் இருந்த அவசர கால ஜன்னலை திறந்து விமான இறக்கை மீது குதித்துள்ளார். இறக்கை மீது ஊற்றப்பட்டிருந்த சூடு நீரால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் காலதாமதமாக புறப்பட்டது.
இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவரது விமான பயணிச்சீட்டின்படி அவர் சரியான விமானத்தில்தான் ஏறியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.