;
Athirady Tamil News

சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, ஆரம்பப்பிரிவு விளையாட்டு விழா..!! (படங்கள்)

0

சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, ஆரம்பப்பிரிவு விளையாட்டு விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

யாழ். சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, ஆரம்பப்பிரிவு விளையாட்டு விழா நிகழ்வு 28.02.2018 புதன்கிழமை பி.ப 01.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் நந்தீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி ஆர்.உதயரத்னம் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினராக பழையமாணவர் எஸ்.புவிராஜா அவர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் மெய்வன்மை நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், விருந்தினர்களால் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 14 =

*