;
Athirady Tamil News

112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்..!!

0

மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகள் மோதும் வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான 112 ஆவது மாபெரும் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.

அது விடயந்தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் ஒன்று கூடலும் இன்று பிற்பகலில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்.மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்ட போட்டிகள் மாறிவரும் கலாச்சார சீரழிவுகள் காரணமாக நிறுத்தப்பபடும் நிலையில், இப் போட்டி 112 ஆவது தடவை இடம்பெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − fourteen =

*