;
Athirady Tamil News

அம்பாறை பள்ளிவாசல்,வர்த்தக நிலையங்களை தாக்கிய ஐவர் அதிரடியாக கைது…!!

0

அம்பாறை பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்ததாக அம்பாறை பொலிஸார் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்.

முஸ்லிம் உணவகங்களில் கருத்தடை மாத்திரை கலந்து உணவு உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்து பெரும்பான்மையின குழுவினர் கடந்த 26ஆம் திகதி அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக அம்பாறை நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு கடந்த நாட்களாக முஸ்லிம் வர்த்தகர்களும், அரச நிறுவனங்களில் பணிபுரிகின்ற அதிகாரிகளும் பணிகளுக்குத் திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற அம்பாறை பொலிஸார், மேலும் ஐவரை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*