;
Athirady Tamil News

பீகாரில் 4 சட்ட மேலவை உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்..!!

0

பீகார் மாநில காங்கிரசின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அசோக் சவுத்ரி. தற்போது சட்ட மேலவை உறுப்பினராக இருக்கும் இவர் திலிப் சவுத்ரி, தன்வீர் அக்தார் மற்றும் ராம் சந்திர பார்தி ஆகிய 3 சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுடன் இணைந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக புகார் வந்தது. இதையடுத்து நேற்று அவர்கள் நான்கு பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அசோக் சவுத்ரி ‘கட்சிக்காக உழைத்த எங்களைப் போன்ற உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அதனால் நாங்கள் நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர உள்ளோம்’ என தெரிவித்தார்.

நான்கு பேரும் கட்சியில் சேர்ந்த பின்னர் நிதிஷ் குமார் தனது மந்திரி சபையை விரிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அசோக் சவுத்ரிக்கு மந்திரி பதவி கொடுக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − ten =

*