;
Athirady Tamil News

கொந்தளிப்புடன் காணப்படும் கடல் – அதிகரித்துள்ள காற்றின் வேகம்…!!

0

நாட்டின் காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்,

ஏனைய பல இடங்களில் பிற்பகல்2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்,

காலியிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவுவேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்,

கடற்பகுதிகளில் காற்றானது, மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்கு திசையில் வீசும்,

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர்வரை அதிகரித்து வீசக்கூடும்.

முல்லைத்தீவிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்,

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்,
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடிமின்னலிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + thirteen =

*