;
Athirady Tamil News

கையளிக்கப்பட்டுள்ள நியமனக் கடிதங்கள் – நீதி கிடைப்பதற்கான பொறிமுறை அமுல்…!!

0

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிடம் நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (28.02.2018) கையளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைப்பதற்கான பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்காக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக சட்டத்தின் கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய உறுப்பினர்களாக ஜயதீபா புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹாந்தி அன்ரெனிரீ பீறிஸ், சிறியானி நிமல்கா பெர்னாண்டோ, மரிக் ரஹீம், சோமசிறி கே லியனகே, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோரரும் நியமிக்கப்பட்டு, இந்த உறுப்பினர்கள் மூன்று வருடத்திற்கான சேவையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 4 =

*