;
Athirady Tamil News

பசியால் வாடும் கலே அகதிகள்: உணவளிக்க பிரான்ஸ் அரசு திட்டம்..!!

0

பசியால் வாடும் கலே வனப்பகுதி அகதிகளுக்கு உணவு வழங்க முடிவெடுத்துள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதியில் கலே வனப்பகுதிக்கு சென்று பார்வையிட்டிருந்தார் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்.

அங்கு பசியால் வாடும் அகதிகளைக் கண்ட அவர், காட்டுப் பகுதியில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு உணவு அளிக்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் எத்துவா பிலிப் அறிவித்துள்ளார்.

மேலும், தற்போது வரை அகதிகளுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த நிலையில் வருகின்ற மார்ச் 6-ஆம் திகதி முதல் அரசின் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

மட்டுமின்றி, அப்பகுதியில் இருந்த அகதிகள் முகாம் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசால் அகற்றப்பட்டு தற்போது சில நூறு அகதிகள் மட்டுமே குறித்த வனப்பகுதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*