;
Athirady Tamil News

வடமாகாண கல்வி அமைச்சருக்காக வவுனியாவில் காத்திருந்த கல்விச்சமூகம்…!!

0

????????????????????????????????????
வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரந்த முழு நிலா கலை விழாவிற்கு கல்வி அமைச்சரின் வருகைக்காக கல்விச்சமூகமே காத்திருந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று வட மாகாண கல்வி அமைசசின் ஏற்பாட்டில் முழு நிலை கலைவிழா இன்று (01) காலை 9 மணிக்கு ஆரம்பமாக இருந்தது.

இதன்போது அழைப்பு விடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், கல்வித்துறை சர்ந்தவர்கள், மாணாவர்கள் என பலரும் குறித்த நேரத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

இதன்பொது திருகோணமலையில் இருந்து வவுனியா வடவக்கு கல்வி வலயத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணியும் குறித்த நேரத்திற்கு பிரசன்னமாகியிருந்தார்.

எனினும் வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் சுமார் ஒரு மணி தாமதமாகவே நிகழ்வுக்கு வந்திருந்தார்.

இதன் காரணமாக அவரை அழைத்து வருவதற்காக கல்விச்சமூகத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் ஒரு மணி நேரமாக சாஸ்திரிகூழாங்களம் சிவன் ஆலயத்தில் காத்திருந்தனர்.

மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் முன்மாதிரியாக செயற்பட வேண்டிய கல்வி அமைச்சரே இவ்வாறு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நிகழ்வுக்கு சமூகமளித்தமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + sixteen =

*