;
Athirady Tamil News

சிரியப் படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும், யாழிலும் கண்டன கவனயீர்ப்பு போராட்டம்…!! (படங்கள்)

0

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் இன்று(01.03.2018) கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து, சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக சிரியாவில் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை இவர்கள் வெளிப்படுத்தியினர்.

ஐ.நாவே உனது கள்ள மௌனத்தை களை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல், பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு, 2009 முள்ளிவாய்க்கால் – 2018 இல் சிரியா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கண்டன கவனயீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக யாழ்ப்பாணத்திலும், இன்றைய தினம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இளைஞர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 4 =

*