நிர்வாணமாக அசுர வேகத்தில் சென்ற நபர்: பிடிக்க முடியாமல் தவித்த பொலிசாரின் வீடியோ..!!

அமெரிக்காவில் நிர்வாணமாக இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஞாயிற்று கிழை அமெரிக்காவின் Missouri பகுதியில் உள்ள Kansas City-யில் அமைந்திருக்கும் சாலையில் வாகனங்கள் வந்து கொண்டிருக்கும் போது, அதற்கு எதிர் திசையில் ATV டிரைவர் ஒருவர் நிர்வாணமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு என்று அஞ்சிய பொலிசார் அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த பொலிசாருக்கே தண்ணீர் காட்டுவது போல் அசுர வேகத்தில் செல்கிறார்.
அவரை பிடிப்பதற்கு 5-க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதால் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த நபரை பொலிசார் கைது செய்தனரா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.