;
Athirady Tamil News

இதை படித்த பின் ஹெட்போன் பயன்படுத்தவே மாட்டீங்க..!!

0

பிரேசிலில் ஸ்மார்ட்போன் charging-யில் இருக்கும் போதே, அதனுடன் ஹெட்போன் பயன்படுத்திய இளம்பெண், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த 17 வயது இளம்பெண் லூசியா பினஹெரியோ, பிரேசிலின் ரியாச்சோ பிஃரியோ நகரில் வசித்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் தரையில் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார்.உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், லூசியா தனது ஸ்மார்ட்போனுக்கு charge ஏற்றிக் கொண்டிருக்கும்போதே, அதில் ஹெட்போனை பயன்படுத்தியிருக்கிறார்.

அப்போது, Charger வழியாக பாய்ந்த அதிகப்படியான மின்சாரம், லூசியாவை தாக்கியுள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த ஹெட்போனை மின்சாரம் உருகச் செய்துள்ளத.

இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த ஒரு மணிநேரத்தில், லூசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெட்போனில் இருந்து காதுகளுக்கு 90 டெசிபல் ஒலியை கடத்துகிறது. இது காது கேளாமை பிரச்சனையை ஏற்படுத்தும், பிறரது ஹெட்போனை பயன்படுத்துவதால், காதுகளில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கு தீர்வு என்னவெனில், மிகச்சிறிய மற்றும் காதுகளை அடைக்கும் படியான ஹெட்போன்களை பயன்படுத்துவதை தவிக்க வேண்டும். அதற்கு பதிலாக, காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.

ஹெட்போன்களில் உள்ள ஸ்பான்ஜ் கவர்/ரப்பர் கவர்களை, மாதத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். மேலும், அடிக்கடி ஹெட்போனை சுத்தம் செய்ய வேண்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*