;
Athirady Tamil News

முச்சக்கரவண்டியில் கார் மோதுண்டு விபத்து இருவர் காயம்…!!

0

ஹட்டன் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் காறொன்று முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் புரூட்டில் பகுதியிலே 01.03.2018 மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டன் பகுதியிலிருந்து கினிகத்தேன பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சென்ற முச்சக்ரவண்டியில், கொழும்பிலிருந்த கொட்டகலை நோக்கி வந்த கார் மோதுண்டே விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட அதில் பயணித்த மேலும் ஒருவருமாக இருவர் காயமடைந்து வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 19 =

*