;
Athirady Tamil News

நானுஒயா காட்டுபகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு…!!

0

நானுஒயா ஈஸ்டல் தோட்ட காட்டுபகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று(01.03.2018) வியாழக்கிழமை காலை 11.00 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூதாட்டி நேற்று(28.02.2018) புதன்கிழமை காட்டுபகுதிக்கு விறகு சேகரிக்க சென்று காணாமல் போயுள்ள நிலையில் மூதாட்டியின் உறவினர்கள் நானுஒயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தாக பொலிஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில் மூதாட்டியை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டபோதே மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின் மூதாட்டியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*