;
Athirady Tamil News

இலங்கை- தாய்லாந்து அரசியல் ஆலோசனை பேச்சுவார்த்தை..!!

0

இலங்கை- தாய்லாந்து அரசியல் ஆலோசனை செயற்பாட்டின் நான்காவது சுற்று பேச்சுவார்த்தை.

இலங்கைக்கும் – தாய்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனை செயற்பாட்டின் நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை கொழும்பில் இடம்பெற்றது.

அரசியல், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பாகவும், மேம்படுத்துவது தொடர்பிலும்; அர்ப்பணிப்பதாக இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் உறுதியளித்துள்ளார்கள்.

புரிந்துணர்வு ரீதியான ஒத்துழைப்புடன் விவசாயம், தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, கலாசாரம் ஆகிய துறைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

இலங்கைக் குழுவின் தலைவராக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் பணியாற்றினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 1 =

*