;
Athirady Tamil News

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் இருந்த உதிரிப்பாகங்கள் திருட்டு…!!

0

பாதுகாப்பாக வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் டயர் மற்றும் பெற்றரி உட்பட உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடா்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது…..

பஸ்ஸின் உரிமையாளர் வழமை போன்று தனது பேருந்தினை வீட்டின் முன்னால் நிறுத்தி வைத்துள்ளார்.

பின்னர் அதன் சேவைக்காக இயக்கிய போது குறித்த பேருந்து இயங்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பேருந்து உரிமையாளா் குறித்த பேருந்தினை பரிசோதித்தபோது பேருந்தில் இருந்த மின்கலம் மற்றும் மேலதிக டயர் என்பன திருடப்பட்டுள்ளன.

இது குறித்து உடனடியாக இன்று(01-03-2018) வியாழக்கிழமை எறாவூர் பொலிஸாருக்கு முறையிடப்பட்டது.

இந்த திருட்டு சம்பவம் தொடா்பிலான விசாரணையை ஏறாவூர் பொலிஸ் முன்னெடுத்துவருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*