;
Athirady Tamil News

வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டங்கள் – கேபினட் கூட்டத்தில் விவாதம்..!!

0

சமீப காலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று விட்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளன. விஜய் மல்லையாவை தொடர்ந்து குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

மேலும், அதனை தொடர்ந்து ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி உள்பட பலர் வங்கிகளில் கடன் பெற்று விட்டு மோசடியில் ஈடுபட்டனர். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

மோசடியில் ஈடுபட்டவர்கள் நிறுவனங்களில் சோதனை நடத்துவது, சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். மேற்கண்ட அனைத்து சம்பவங்கள் மத்திய அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பலர் கருத்து பதிவிட்டிருந்தர். இந்நிலையில், வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. இதற்காக, சட்ட அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து சட்ட முன்வரைவு ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில், இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த மந்திரி சபை கூட்டத்தில், முறைசாரா நிதி டெபாசிட் செய்வதை தடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 20 =

*