;
Athirady Tamil News

ஓரியன்டல் வங்கியில் முறைகேடு – பஞ்சாப் முதல்வர் மருமகனிடம் சி.பி.ஐ விசாரணை..!!

0

உத்தரபிரதேச மாநிலம் காசியாத்தை சேர்ந்த சிம்போஹோலி சர்க்கரை ஆலை நிறுவனம் ஓரியன்டல் வங்கியிடம் ரூ.109.08 கோடி கடன் வாங்கி இருந்தது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்தது. பணத்தை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வங்கி அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த ஆலை நிறுவனத்துக்கு ஏற்கனவே ரூ.97.85 கோடி கடன் கொடுக்கப்பட்டது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தது 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி மீண்டும் ரூ.110 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மோசடி செய்த அந்த நிறுவனத்துக்கு பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் 2-வது முறையாக கடன் கொடுக்கப்பட்டது. அதாவது உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த 3-வது வாரத்தில் இந்த லோன் சிம்போ ஹோலி சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு ஒரியண்டல் வங்கி வழங்கி இருந்தது. அந்த நிறுவனம் இந்த கடனையும் செலுத்தாமல் ரூ.110 கோடியை மோசடி செய்தது தெரிய வந்தது.

கடன் வாங்கிய குறிப்பிட்ட காலத்தில் இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால்சிங் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

இதுதொடர்பாக சர்க்கரை ஆலையின் இயக்குனர் குர்மித்சிங்மான், துணை நிர்வாக இயக்குனர் குர்பால் சிங், தலைமை நிர்வாக அதிகாரி ராவ், தலைமை நிதி அதிகாரி சஞ்சய் அபரியா உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது.

இது தொடர்பாக பல இடங்களில் அதிகாரிகள் சோதனையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக குர்பால் சிங்கிடம் இன்று சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*