;
Athirady Tamil News

பாதுகாப்பு மின்சார கம்பி வேலியில் சிக்குண்ட ஒருவர் பலி…!!

0

வீட்டு தோட்டத்திற்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பு மின்சார கம்பி வேலியில் சிக்குண்ட ஒருவர் பலியானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாகலை பொலிஸ் பிரிவின் வட்டகொடை மெதகுப்புர கீழ் பிரிவை சேர்ந்த 68 வயதுடைய கிட்னன் பெரியசாமி என்பவரே இன்று(01.03.2018) காலை இவ்வாறு பலியனார்.

தனது வீட்டிலிருந்து மரக்கறி தோட்டத்திற்கு சட்ட விரோதமாக மின்சார கம்பி வேலியை போட்ட தோட்ட உரிமையாளரே இவ்வாறு பலியானார்.

வீட்டிலிருந்து மரக்கறி தோட்டத்திற்கு சென்றவரை காணவில்லையென உறவினர்கள் தேடியபோதே சடலம் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலத்தை மீட்ட பொலிஸார் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 5 =

*