;
Athirady Tamil News

திருகோணமலையில் இளைஞர்கள் கைது…!!

0

திருகோணமலை அநுராதபுரம் சந்தி பகுதியில் தகராறில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் நேற்றிரவு உப்புவெளி காவற்துறையினரால் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, காந்திநகர் பகுதியைச்சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் ஆறு பேரும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உட்பட இருவர் தெமடகொடை வித்தியாலங்கார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதனிடையே, எஹெலியகொடை பிரதேசத்தில் சிற்றூர்ந்து ஒன்றில் சென்று பெண்ணொருவரின் தங்க ஆபரணங்களை திருடிச்சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சிற்றூர்தியில் இருந்து அவர்கள் திருடிய தங்க ஆபரணங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சிற்றூர்தியில் இருந்து 6 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*