;
Athirady Tamil News

மட்டக்களப்பு பகுதியில் வாகனங்கள் மீது தாக்குதல்..!!

0

மட்டக்களப்பு, வாகரை பகுதியில் டிப்பர் வாகனங்கள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகரை கொழும்பு வீதியால் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்கள் இரண்டின் மீதே நேற்றிரவு ( புதன்கிழமை) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 26 ஆம் திகதி கதிரவெளி பகுதியால் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் முன்னாள் கிராம சேவையாளர் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பிரதேச மக்கள் ஒன்றுகூடி குறித்த டிப்பர் வாகனத்தை எரித்ததுடன் அவ்வீதியால் சென்ற டிப்பர் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

குறித்த தாக்குதலைத் தொடர்ந்து வாகரை வீதியால் கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் வாகனங்களை இனிமேல் விடமாட்டோம் என்றும் மீறி வந்தால் தாக்குதல் நடத்துவோம் எனவும் கிராம மக்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*