;
Athirady Tamil News

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவின் எதிரொலி…!!

0

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவின் எதிரொலி! மாணவன் மீது ஆசிரியைகள் தாக்குதல்! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியைகளுக்கு எதிராக 20-02-2018 அன்று மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது குறித்த பாடசாலையில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவனான ஜதுவாணன் என்பவரது சகோதரன் நகரசபை வேட்பாளராக வெளிக்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டுள்ளார். எனினும் குறித்த வேட்பாளர் தோல்வியுற்றிருந்தார்.

பாடசாலையில் குறித்த மாணவனிடம் இரண்டு ஆசிரியைகள் உனது அண்ணா எத்தனை வாக்குகள் பெற்றுள்ளார் என கேட்டுள்ளனர் மாணவன் முப்பது வாக்குகள் பெற்றவர் என தெரிவித்த நிலையில் ஏன் எங்களிடம் பொய் கூறுகிறாய் உங்கள் அண்ணன் 11 வாக்குகள் தான் பெற்றுள்ளான் என தெரிவித்து மாணவனை சராமாரியாக தாக்கியுள்ளனர்.

அம்மாணவன் தமது குடும்பத்தாரிடம் முறையிட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தார் குறிப்பிட்ட இரண்டு ஆசிரியைகளுக்கும் எதிராக வவுனியா மணிதவுரிமை ஆணைக்குழுவிலும் பாடசாலை அதிபரிடமும் வலயகல்வி பணிப்பாளரிடமும் மாணவன் மீது ஆசிரியைகள் தாக்குதல் நடாத்தியதாகவும் இதனால் மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன்; பாடசாலை செல்ல மறுத்து வருவதாகவும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாடசாலை அதிபரிடம் வினவியபோது குறித்த மாணவன் நன்றாக கல்வி பயில கூடியவன் என்பதுடன் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்று சித்தியெய்தியவன் என்றும் குறிப்பிட்டதுடன் சம்பவம் இடம்பெற்ற அன்று ஆசிரியை தாக்கியுள்ளதை ஏற்றுக்கொண்டார்.

மாணவனின் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில் சில ஆசிரிகைகள் மாணவர்களின் கல்வி பாதிப்படையும் வகையிலும், மனம் பாதிப்படையும் வகையிலும் நடந்துகொள்வதாகவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு பொறுமையாக செயற்பட்டாலும் சில ஆசிரியைகள் எல்லை மீறி நடந்துகொள்வதுடன் தவறு செய்யும் ஆசிரியர்களை மற்றைய ஆசிரிய சமூகம் கூட்டாக சேர்ந்து காப்பாற்றி பாதுகாத்து வருகிற நிலையில் பாடசாலை மாணவரர்கள் கல்லியை கைவிட்டு தடம் மாறி பயணிக்க எத்தனிப்பதாகவம் கவலை வெளியிட்டதுடன் ஆசிரியர்களினால் மாணவன் ஒருவன் தண்டிக்கப்படும் போது அது பெற்றோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 1 =

*