;
Athirady Tamil News

உப்புவெளியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!!

0

திருகோணமலை உப்புவெளி, மிஹிந்துபுர பகுதியில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு என்பன வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*