;
Athirady Tamil News

இன்றுதொடக்கம் சைக்கிள் ஓட்டவுள்ள இலங்கை விமானப் படை…!!

0

இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டியொன்று முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விமானப் படையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த சைக்கிள் சவாரி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாகவும் கொழும்பில் உள்ள விமானப் படை தலைமையக வளாகத்திலேயே இந்தச் சைக்கிளோட்ட சவாரி ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை விமானப்படையும், இலங்கை சைக்கிள் ஓட்டச் சம்மேளனமும் இணைந்து இந்தப் போட்டியினை ஏற்பாடு செய்துள்ளன. இப்போட்டியானது இன்றுமுதல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் இதில் 150ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை விமானப் படை 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் நாள் ஆரம்பிக்கப்பட்டதோடு உள் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் பங்குபற்றியிருந்ததுடன் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 7 =

*