;
Athirady Tamil News

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகா் நியமனம்…!!

0

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி அச்சுதன் பசுபதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவருக்கான நியமனம் நேற்றையதினம் (01-03-2018) வடக்கு மாகாண ஆளுநர் ரெயினோல்ட் கூரேயினால் வழங்கப்பட்டது.

கொடிகாமம் வைத்தியசாலையின் அத்தியட்சகராக இதுவரை கடமையாற்றிய வைத்திய கலாநிதி அச்சுதன் பசுபதி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 6 =

*