;
Athirady Tamil News

சட்ட ஆட்சியை மதித்து நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையின் நிலை…!!

0

உலக நீதித் திட்ட சட்டவாட்சி சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி இலங்கை ஒன்பது இடங்களால் முன்னேற்றமடைந்துள்ளது.

சட்டவாட்சியை மதித்து நடக்கும் நாடுகளின் பட்டியலை ஆராய்கையில் சாதாரண மக்களது கண்ணோட்டத்தின் அடிப்படையில் இலங்கை முன்னணியில் காணப்படுகிறது.

உலக நீதித் திட்ட சட்டவாட்சி சுட்டெண் பட்டியலில் 113 நாடுகள் பட்டியலிடப்பட்டன. இந்தப் பட்டியலில் இலங்கை 68வது இடத்தில் உள்ளது. கடந்த பட்டியலுடன் ஒப்பிடுகையில் இலங்கை 9 இடங்களால் முன்னேற்றம் கண்டிருக்கின்றது.

சட்டவாட்சி சுட்டெண் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. வெனிசுவெலா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்திருப்பதுடன் கம்போடியா 112 ஆவது இடத்திலும், மலேசியா 53வது இடத்திலும், நேபாளம் 58வது இடத்திலும் உள்ளன. இந்தியா 62வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*