;
Athirady Tamil News

யாழில் கடையின் பின்புறமாக காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலையே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அறுபத்தொன்பது வயதான சிலுவைராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியிலுள்ள இரும்புக்கடை ஒன்றின் உரிமையாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது இரும்புக் கடையின் பின்புறமாகவே அன்னார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சாவுச் சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + thirteen =

*