;
Athirady Tamil News

இலங்கையின் காட்டு வீதியொன்றில் மகிழுந்து கண்ட அதிர்ச்சி…!! (படங்கள்)

0

இலங்கையின் மத்திய மாகாணம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – டயகம பிரதான வீதியில் போடைஸ் என்.சி பகுதியில் மகிழுந்து ஒன்று இன்று காலை வழியில் பாய்ந்து, புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்று வெளிக்கிழமை காலை எட்டு மணியளவில் குறித்த மகிழுந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மகிழுந்தில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் ஒருவருக்கு மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவர்களுக்கு பெரியளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் விசாரணைகளின் பின் கூறப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. என்.சி பகுதியில் உள்ள பாரிய வளைவில் திருப்பும் போது மீண்டும் திருப்புவதற்கு முடியாமல் போனமையினாலேயே அது கீழே பாய்ந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 2 =

*