;
Athirady Tamil News

நிலத்தைத் தோண்டியவர்களுக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி…!!

0

இலங்கையின் வடக்கே வவுனியாவில் நிலத்தைத் தோண்டிய சில நபர்கள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதையல் ஒன்றினைக் கைப்பற்றும் நோக்கிலேயே இவர்கள் நிலத்தைத் தோண்டியதாகவும் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியில் சிலர் புதையல் தோண்டுவதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.இதனையடுத்து அந்த இடத்தைச் சுற்றிவளைத்த பொலிஸார் அங்குள்ள மைதானப்பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய மூவரைக் கைது செய்தனர். இவர்களுடன் சேர்ந்து தோண்டிய சகபாடிகள் மூவர் தப்பியோடியுள்ளனர்.

இதேவேளை நிலம் தோண்ட பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான் போன்ற கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இவர்களை பொலிஸ் விசாரணையின்பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − twelve =

*