;
Athirady Tamil News

இமாச்சலில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய 8 சீக்கியர்கள் விபத்தில் பலி..!!

0

இமாச்சலப்பிரதேசம் மாநிலம் குலு மாவட்டத்தில் மனிகாரன் பகுதியில் சீக்கிய புனித தலம் ஒன்று உள்ளது. இங்கு ஸ்வார்காத் பகுதியைச் சேர்ந்த 8 சீக்கியர்கள் வழிபாடு நடத்திவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சண்டிகர் – மனாலி தேசிய நெடுஞ்சாலையில் குன்புர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்து விலகி அருகிலிருந்த பள்ளத்தில் பாய்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான காரை மீட்கும் பணி நடந்து வருவதாகம் போலீசார் கூறியுள்ளனர். கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலையில் கார் நழுவி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #TamilNews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − one =

*