;
Athirady Tamil News

இலங்கையின் மீன்பிடித்துறை சார்ந்த சட்ட மூலம் அமைச்சரவைக்கு…!!

0

இலங்கையின் தேசிய மீன்பிடித்துறை சார்ந்த சட்டமூலத்தை இந்த மாத இறுதிக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கான அறிவுறுத்லைத கடற்றொழில் நீரியியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சை முறையாக முன்னெடுத்துச் செல்வதே, இந்த தேசிய மீன்பிடி சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதுவிடயம் தொடர்பான சட்டமூல பிரேரணையை தயாரிப்பதற்கு நோர்வே அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது. இந்த சட்டமூல ஆக்கத்திற்கென உரிய தரப்பினர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளும் கிடைக்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*