;
Athirady Tamil News

அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சு மாற்றம்…!!

0

அடுத்து மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தின்போதே சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படுவார் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தொிவித்துள்ளார்.

இந்திய நிதியுதவியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வசிக்கும் வருமானம் குறைந்த 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவசமாக மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று அங்குணகொலபெலஸ்ஸையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போது ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணியின் தலைவரும் நீரியல் வளங்கள், மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர இத்தகவலை வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்படும் நபர் பக்கச்சார்பற்றவராக இருக்க வேண்டும். பாதாளக் குழுக்களை அடக்கும் திறமை, போதைப் போருள் வர்த்தகத்தை ஒழிக்கும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்.

அவ்வாறான தகுதிகள் கொண்ட ஒருவருக்கே அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும்.

கடந்த அமைச்சரவை மாற்றத்தில் எங்களுக்கும் அதிருப்திகள் உள்ளது. ஆனால் கட்சியின் நலன் கருதி ஜனாதிபதியின் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − fourteen =

*