;
Athirady Tamil News

திடீரென மரணமான 15 வயது பாடசாலை மாணவி..! புஸ்ஸல்லாவையில் சோகச் சம்பவம்…!!

0

புஸ்ஸல்லாவ – உடகம அடபாகே பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் நடன பயிற்சி அறையின் அருகாமையில் வைத்து ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் 12.05 மணியளவில் மாணவிக்கு தலைவலி ஏற்பட்டு மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , மாணவி உடனடியாக கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கம்பளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

மாணவியின் இந்த திடீர் மரணம் குறித்து புஸ்ஸல்லாவ காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 10 =

*