;
Athirady Tamil News

அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய சிற்பதேருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு…!! (படங்கள்)

0

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற சிற்பதேருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது .

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற 39.3 அடி உயரமான சிற்பதேருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் நடைபெற்றது .

யாழ்ப்பாணம் ஸ்ரீ காளிகா சிற்பகலை ஸ்தபதி ரதகளா சூரி செல்லையா பாலச்சந்திராவினால் நிர்மாணிக்கப்படுகின்ற சிற்பதேருக்கு பவளக்கால் பொருத்தும் நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ,பக்த அடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − eight =

*