;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் தொடர் பனிச்சரிவு அபாயம் – பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. ஒரு சில பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அடுத்தடுத்து பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. பனிச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளையும் தெரிவித்துள்ளது.

பாரமுல்லா, குர்மார்க், குப்வாரா, பந்திபோரா, கார்கில் உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பனிச்சரிவும், பூஞ்ச், ரஜோரி, ராம்பன், தோடா, விஷ்த்வார் உதம்பூர், அனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட பலர் மாவட்டங்களில் குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் பனிச்சரிவும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பேரிடர் மேலாண்மை வாரியம் கூறியுள்ளது. இந்த பகுதிகளில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 8 =

*