;
Athirady Tamil News

கொழும்பு மாநகர ஆணையாளர் பதவியிலிருந்து நீக்கம்…!!

0

கொழும்பு மாநகரசபை ஆணையாளர் வி.கே.ஏ.அனுரவை பதவியில் இருந்து நீக்க மேல் மாகாண ஆளுனர் கே.பி.லோகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மீதொட்டுமுல்ல குப்பை மேடு தொடர்பான விபத்து பற்றி கண்டறிவதற்கென மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரதாஸ நாணயக்கார தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால், மேற்கொள்ள்பபட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, மேல்மாகாண ஆளுநரின் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 23 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் சுமார் 180 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்தனமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 9 =

*