;
Athirady Tamil News

தாயார் கோரிக்கையை ஏற்று வீடு திரும்பிய பயங்கரவாதி – காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

0

ஜம்மு – காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து வருவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வரும் நிதியின் துணைகொண்டு இவர்களை தவறான பாதையில் வழிநடத்தும் சம்பவமும் அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த இளைஞர்களை வீடு திரும்புமாறு பாதுகாப்பு படை மற்றும் அரசு தரப்பிலும், அவர்களது பெற்றோரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த வாலிபர் ஒருவர் தாயாரின் கோரிக்கையை ஏற்று குடும்பத்தாரிடம் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக, போலீஸ் டி.ஜி.பி. எஸ்.பி. வெய்த் டுவிட்டரில் கூறுகையில், தாயாரின் கோரிக்கையை ஏற்று வன்முறை பாதையில் இருந்து விலகி மற்றொரு இளைஞர் வீடு திரும்பி உள்ளார். உறவினர்களுடன் இணைந்த அந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முதல் இதுபோன்ற சம்பவங்களில் 12-க்கும் அதிகமான இளைஞர்கள் சரணடைந்து வீடு திரும்பி உள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*