;
Athirady Tamil News

ஊழல் முறைகேடு- வங்கி பெண் அதிகாரி மீது சி.பி.ஐ. சொத்து குவிப்பு வழக்கு..!!

0

வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகளே உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்தது போல் பல வங்கிகளிலும் இதே போன்ற மோசடிகள் நடந்துள்ளன. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஊழல் முறைகேடு மூலமாக பல கோடி ரூபாய் சொத்து குவித்த வங்கி பெண் அதிகாரி ஒருவர் மீது சி.பி.ஐ. தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.

அந்த அதிகாரியின் பெயர் அர்ச்சனா பார்கவா. இவர், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவில் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

2014-ம் ஆண்டு அவர் தானாகவே விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருந்ததாக புகார் வந்தது.

இதையடுத்து 2016-ல் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். அவர் 2004-ல் இருந்து 2014 வரை ரூ.5 கோடியே 22 லட்சம் சொத்து சேர்த்து இருந்தார். அதில், ரூ.3 கோடியே 63 லட்சத்துக்கு கணக்கு காட்டவில்லை. இவை அனைத்தும் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

அவருக்கு டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 3 அடுக்கு கொண்ட பங்களா, வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி வீடு. மேலும் மும்பை, டெல்லியில் சொத்துக்கள், அவருடைய கணவர், மகன் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது ஆகும்.

இதையடுத்து அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 4 =

*