;
Athirady Tamil News

மெதகம மகா வித்தியாலய புதிய கட்டடம் ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிப்பு…!! (படங்கள்)

0

எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் திம்புலாகல, மெதகம மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இரண்டு மாடிக் கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலைக்கு இன்று முற்பகல் வருகை தந்த ஜனாதிபதிக்கு மாணவர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அங்குள்ள விசேட அதிதிகளின் நினைவுக் குறிப்பேட்டிலும் கையொப்பமிட்டார்.

அதன் பின்னர் பாடசாலையின் சங்கீதப் பிரிவு மாணவர்களினால் நிகழ்த்தப்பட்ட இசை நிகழ்ச்சியையும் ஜனாதிபதி கண்டுகளித்தார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் புஷ்பகுமார ரணசிங்க, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, மகாவலி பீ வலயத்தின் வதிவிட வர்த்தக முகாமையாளர் துசார தந்தநாராயன, வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.வீ.எம்.சஞ்ஜீவனி, வடமத்திய மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் எச்.டீ.கே. பிரியங்கர மற்றும் பாடசாலை அதிபர் சீ.ஆர். பத்மினி சுவர்ணலதா உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*