;
Athirady Tamil News

பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்தால் அது அமெரிக்காவில் சர்வசாதாரணம்..!!

0

அமெரிக்காவில் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழப்பதெல்லாம் சாதாரண ஒன்று என்கின்றனர். மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்ட பின் சுயநினைவு இழந்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து பலர் அங்கு இறந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 25-ஆம் திகதி நடிகை ஸ்ரீதேவி பாத்ரூமில் வழுக்கிவிழுந்தார் அல்லது பாத் டப்பில் மூழ்கி இறந்தார் என்ற செய்தி பரவியதும் அனைவரும் பாத் டப்பை பார்த்தாலே நடுங்குகின்றனர்.

இந்நிலையில் நாள் தோறும் அமெரிக்காவில் பாத்டப்பிலோ அல்லது ஸ்பாவிலோ மூழ்கி ஒருவர் உயிரிழப்பது என்பது சர்வசாதாரணமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது

இப்படி உயிரிழப்பவர்கள் மது அல்லது ஏதேனும் போதைப்பொருள் உட்கொண்டவர்களாகவோ தான் அதிகளவு இருக்கிறார்காள். இந்த சம்பவம் மேற்கு அமெரிக்காவில் தான் அதிகளவு நடைபெறுகிறதாம்.

கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் 1,676 அமெரிக்கர்கள் பாத்ரூமில் வழுக்கிவிழுந்து இறந்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. அதன்படி பார்த்தால் ஆண்டுக்கு 335 பேர் இம்மாதிரியான ரிஸ்க்குகளை சந்திப்பவர்களாக இருக்கின்றனர்.

இருப்பினும் பாத்ரூமில் மூழ்கி உயிரிழப்பது பற்றிய புரிதல் மக்களுக்கு ஓரளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இவை குறித்த ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 4 =

*