;
Athirady Tamil News

60 ஆண்டுகளாக ஒரே கைப்பையை பயன்படுத்தும் பிரித்தானியா ராணி: சுவாரஸ்யமான காரணம்..!!

0

தான் பங்கேற்கும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத் II 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கைப்பையை எடுத்துவருவதை நீங்கள் யாரேனும் கவனித்துள்ளீர்களா ? இல்லை என்றால் வாருங்கள் அதற்கான காரணத்தை இந்த பதிவில் காண்போம்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் II 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கருப்பு நிற கைப்பையை பயன்படுத்தி வருகிறார். இந்த கைப்பை வடிமைத்து கொடுத்தவர் பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் ஜெரால்ட் போட்மர் ஆவார்.

77 வயதான ஜெரால்ட் போட்மர் ஒரு மாத இதழ்க்கு அளித்த பேட்டியில் ராணி எலிசபெத் II 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கைப்பையை பயன்படுத்தி வருவதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ராணி உடை அலங்காரம் செய்யும் போது அவருடையை வழக்கமான கைப்பை இல்லை என்றால் அவர் திருப்தியாக உணர மாட்டார்.

மேலும் ராணிக்கு பிடிக்காத வகையில் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தால் அதை அவர் அணிய மாட்டார். அவருக்கு என்ன வேண்டும் மற்றும் எது அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் ராணி தெளிவாக இருப்பார்

இத்தனை வருடம் ஒரே கைப்பையை ராணி தொடர்ந்து பயன்படுத்தி வருவதிலேயே அதன் பாரம்பரியத்தையும், அந்த பையின் மீது ராணிக்கு இருக்கும் பிணைப்பையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை ராணி எலிசபெத்தின் அம்மா 1950-களில் ராணிக்கு முதன் முதலாக ஒரு பையை வாங்கிக் கொடுத்தார். அது அந்த சிறுவயதில் ராணியின் கைகளில் நேர்த்தியாக பொருந்துமாறு சரியான ஆளவில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அன்று முதல் மகாராணியின் விருப்பத்துக்குறிய கைபையாக மாறிவிட்டது என அதை வடிவமைத்த ஜெரால்ட் போட்மர் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*