;
Athirady Tamil News

காதலனுடன் சேர்ந்து போதை மாத்திரை சாப்பிட்ட பிரபல மொடல்: நேர்ந்த விபரீதம்..!!

0

பிரித்தானியாவில் அளவுக்கதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்டதால் பிரபல மொடல் உயிரிழந்துள்ளார்.Bournemouth நகரை சேர்ந்தவர் லவுலா மிச்சி (25), மொடலான இவர் பிரபல நடிகர் ஜான் மிச்சியின் மகளாவார்.

கடந்த நவம்பர் மாதம் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு லவுலா காதலருடன் சென்ற நிலையில் திடீரென மாயமானார்.

இதையடுத்து அதே மாதம் 11-ஆம் திகதி லவுலா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

லவுலா கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் முதலில் பொலிசாருக்கு எழுந்த நிலையில் அவரின் காதலர் சீன் பிரவுடனை பொலிசார் கைது செய்தார்.

இந்நிலையில் MDMA மற்றும் ketamine ரக போதை மாத்திரைகளை லவுலா அதிகளவு சாப்பிட்டதே அவரின் இறப்புக்கு காரணம் என தற்போது பிரேத பரிசோதனை நிபுணர் ரச்சில் கிரிபின் மூலம் தெரியவந்துள்ளது.

லவுலாவின் சடலத்துக்கு முன்னரே இறுதிசடங்கு செய்யப்பட்டாலும், அவரின் திசுக்களை வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரின் மரணத்திற்கான காரணம் உறுதியாகியுள்ளது.

இதனிடையில் பிரவுடன் மீதான அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணை வரும் 23-ஆம் திகதி நடக்கவுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 7 =

*