;
Athirady Tamil News

வைக்கோலுக்குள் இருந்த பாம்பு தீண்டியதில் ஆறு பிள்ளைகளின் தந்தை பலி…!!

0

பாம்பு தீண்டியதில் சுழிபுரம் பகுதியில் ஆறு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிகிச்சை பலனளிக்காது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த 65 வயதுடைய பெ.சுப்பிரமணியம் என்பவா் நேற்று(01-03-2018) காலை வயலில் நெல் அறுவடை செய்ய சென்றுள்ளார்.

அறுவடை முடிந்த பின்னர் வைக்கோலை எடுத்துக்கொண்டு வீடு சென்றுள்ளார். செல்லும் வழியில் வைக்கோலில் இருந்த பாம்பு இவருடைய கையில் தீண்டியுள்ளது.

உடனடியாக சங்கானை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் குறித்த நபர் சிகிச்சை பயனளிக்காது இன்று(02-03-2018) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 5 =

*