;
Athirady Tamil News

அனுஷ்கா சர்மா படத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்..!!

0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள பரி திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரி’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் தனது மனைவியின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ‘பரி’ திரைப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குர்ரான் மற்றும் இந்து மந்திரங்களை கொண்டு மாயாஜாலம் செய்வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் அப்படத்தை தடை செய்வதாக பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த படத்துக்கு சிந்து தணிக்கை சான்றிதழ் அமைப்பும், பஞ்சாப் தணிக்கை சான்றிதழ் அமைப்பும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு தடை விதித்துள்ளது.

விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானில் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*