;
Athirady Tamil News

நிரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து ஹோலி கொண்டாடிய மும்பை மக்கள்..!!

0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.12,717 கோடி மோசடி செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை ஆகியவை விசாரித்து வருகிறது.

இந்த மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி மற்றும் அவரது மனைவி அமீ மோடி, சகோதரர் நிஷால், உறவினர் மெகுல் சோக்ஷி ஆகிய 4 பேர் வெளிநாடு தப்பிவிட்டனர். அவர்களை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவி மூலம் சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள், நிரவ் மோடி நிறுவனத்தினர் பலர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஹோலிகா அரக்கியை எரித்துக்கொன்றதை நினைவு கூறும் வகையில் முதல் நாளான நேற்று தீயவைகளை எரிப்பது வழக்கம். அதன்படி நாட்டிற்கு பேரிழப்பை ஏற்படுத்திய நிரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மும்பை மக்கள் ஹோலியை கொண்டாடினர்.

இதற்காக 58 அடி உயரத்தில் நிரவ் மோடியின் கொடும்பாவி தயாரிக்கப்பட்டு மும்பை வெர்லி பகுதியில் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. அரக்கி ஹோலிகாவுடன் நிரவ் மோடியை ஒப்பிட்டு மும்பை மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + four =

*