;
Athirady Tamil News

வெளிநாட்டவர்கள் அதிக வருவாய் ஈட்டும் உலகின் முக்கிய நகரங்கள்..!!

0

உலகின் பல்வேறு நாடுகளில் பணி புரியும் வெளிநாட்டவர்களின் ஆண்டு வருவாய் பெருமளவு உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் வெளிநாட்டவர்கள் பலர் பணி நிமித்தம் குடியேறியுள்ளனர். இதில் வெளிநாட்டவர்கள் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய நகரங்களில் முதலிடத்தை இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என அழைக்கப்படும் மும்பை பெற்றுள்ளது.

இங்கு வெளிநாட்டவர் ஒருவரின் ஆண்டு வருவாய் ஆனது சுமார் 217,165 டொலர் என திங்களன்று வெளியான புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்தப் பட்டியலில் சிட்னி ($ 134,368), டோக்கியோ ($ 132,508), தோஹா ($ 131,408), சிங்கப்பூர் ($ 117,515) கோலாலம்பூர் ($ 117,515), ஒஸ்லோ ($ 114,538), லண்டன் ($ 107,863), வியன்னா ($ 103,342) மற்றும் இஸ்தான்புல் ($ 100,577) ஆகிய உலகின் முக்கய நகரங்கள் முன்னிலையில் உள்ளன.

மட்டுமின்றி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 30 முக்கிய நகரங்களில் 92 சதவிகித வெளிநாட்டவர்களும் பணிபுரிந்து வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதில் 83 விழுக்காட்டினர் முழு நேர பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*