;
Athirady Tamil News

60 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பாடசாலைக் கட்டடம்…!!

0

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர டட்லி சேனாநாயக்க மஹா வித்தியாலத்திற்கு, ஜப்பான் தக்கசிகு(Japan Takkaciku) நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டினால் கணனி அறை, நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம் என்பன சுமார் 60 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் மங்களசமரவீர கலந்துக்கொண்டு திறந்து வைத்தார். அத்தோடு, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா, தக்கசிகு நிறுவனத்தின் தலைவர் ரியோ எய் யி ஓ ரோயி(Rioho Y Oi Roi)மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அமைச்சர் மங்களசமரவீர கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில், கல்விக்காக 6 சதவீதம் நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*