;
Athirady Tamil News

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர்…!!

0

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசேன்(MIRRAD ROAD SITE AL HUSHAN) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நாளை(04.03.2018) தொடக்கம் 7ஆம் திகதி வரை, நான்கு நாட்களுக்கு இலங்கையில் தங்கியிக்கும் இவர், ஆட்களுக்கு எதிரான கன்னிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவராவார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இவர், இஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறும் இடமான முகமாலைக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*